ஸ்ரீ தலதா மாளிகையின் இணையத்தளம் வழமைக்கு திரும்பியது - நைஜீரியா நாட்டில் இருந்து சைபர் தாக்குதல் - News View

Breaking

Post Top Ad

Monday, August 31, 2020

ஸ்ரீ தலதா மாளிகையின் இணையத்தளம் வழமைக்கு திரும்பியது - நைஜீரியா நாட்டில் இருந்து சைபர் தாக்குதல்

ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தள பிரிவு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது நேற்று (திங்கட்கிழமை) சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தலதா மாளிகையின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டது.

இதனால் சில மணி நேரம் குறித்த இணையத்தளம் செயலிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள், இணையத்தளத்தை மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், குறித்த இணையத்தளம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் நைஜீரியா நாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad