இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

Full Budget Speech - 2019 ::. Latest Sri Lanka News
இவ்வருடத்தின் எதிர்வரும் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு ரூபா 1,900 பில்லியன் அரச செலவினங்களை மேற்கொள்ளுவது தொடர்பிலான குறித்த கணக்கறிக்கையே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று இந்த இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற விவாவதத்தை அடுத்து தற்போது அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இடைக்கால கணக்கறிக்கையில் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள் (ரூபா 1,900 பில்லியன்)

இடைக்கால கணக்கறிக்கையில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பொது சேவைகளுக்கு ரூ. 1298,57,13,000

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சுக்கு ரூ. 288,57,00,000

நிதி அமைச்சுக்கு ரூ. 13650,02,72,000

பாதுகாப்பு அமைச்சுக்கு ரூ. 17409,37,85,000

வெகுசன ஊடக அமைச்சுக்கு ரூ. 887,17,25,000

நீதி அமைச்சுக்கு ரூ. 1037,59,42,000

சுகாதார அமைச்சுக்கு ரூ. 7666,26,40,000

வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு ரூ. 558,52,30,000

போக்குவரத்து அமைச்சுக்கு ரூ. 3328,76,00,000

வலுசக்தி அமைச்சுக்கு ரூ. 7,97,25,000

வர்த்தக அமைச்சுக்கு ரூ. 206,10,55,000

நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு ரூ. 8808,09,13,000

கமத்தொழில் அமைச்சுக்கு ரூ. 2834,65,00,000

மின்சக்தி அமைச்சுக்கு ரூ. 52,64,80,000

காணி அமைச்சுக்கு ரூ. 446,71,50,000

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு ரூ. 2717,04,84,000

கல்வி அமைச்சுக்கு ரூ. 7074,86,10,000

அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ரூ. 19438,10,35,000

பெருந்தோட்ட அமைச்சுக்கு ரூ. 401,58,00,000

கைத்தொழில் அமைச்சுக்கு ரூ. 237,47,90,000

கடற்தொழில் அமைச்சுக்கு ரூ. 290,10,00,000

சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ரூ. 126,67,65,000

சுற்றாடல் அமைச்சுக்கு ரூ. 53,50,10,000

வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுக்கு ரூ. 260,02,16,000

நீர் வழங்கல் அமைச்சுக்கு ரூ. 3525,64,49,000

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சுக்கு ரூ. 41,95,60,000

தொழில் அமைச்சுக்கு ரூ. 169,03,00,000

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ரூ. 542,58,77,000

நீர்ப்பாசன அமைச்சுக்கு ரூ. 1616,70,90,000

No comments:

Post a Comment