கிராம சேவையாளரின் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம் - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

கிராம சேவையாளரின் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட இராசேந்திரகுளம் கிராம சேவையாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்தக வனயீர்ப்பு போராட்டம் இராசேந்திரகுளம் கிராம சேவையாளரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (29) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

கிராம சேவையாளர் ப.பிரதீப் இராசேந்திரகுளம் பிரிவுக்கு நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக சிறப்பாக சேவையாற்றி வருகின்ற சமயத்தில், அவருக்கு பிரதேச செயலாளரினால் கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

பிரதேச செயலாளரினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்து செய்யக் கோரி அப்பகுதி மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எமது கிராம சேவையாளர் எமக்கே வேண்டும், வேண்டாம் வேண்டாம் இடமாற்றம் வேண்டாம், இடமாற்றத்தினை இரத்து செய்து அவரை சேவை செய்ய விடுங்கள் போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவண்ணம் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் கலந்துரையாடியதுடன், குறித்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடி இடமாற்றத்தினை இரத்து செய்யுமாறு தெரிவித்தார். 

குறித்த இடமாற்றத்தினை இரத்து செய்வதாக பிரதேச செயலாளர் வாக்குறு திவழங்கியுள்ளார். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

(வவுனியா விசேட நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad