பாரதிய ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா : இதுவரை 55 மக்கள் பிரதிநிதிகளுக்கு கர்நாடகத்தில் கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

பாரதிய ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா : இதுவரை 55 மக்கள் பிரதிநிதிகளுக்கு கர்நாடகத்தில் கொரோனா

நளின்குமார் கட்டீல் எம்.பி.க்கு கொரோனா: பெல்லி பிரகாஷ் எம்.எல்.ஏ.வுக்கும் வைரஸ் தொற்று
கர்நாடக பாரதிய ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபோல பெல்லி பிரகாஷ் எம்.எல்.ஏ.வுக்கும் வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

கர்நாடகத்தில் முதலமைச்சர் எடியூரப்பா, சட்ட சபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அமைச்சர்கள், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மக்கள் பிரதிநிதிகள் 53 பேருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக 2 மக்கள் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

அதுபற்றிய விவரம் வருமாறு தட்சிண கன்னடா தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர் நளின்குமார் கட்டீல் (வயது 53). இவர் கர்நாடக பாரதிய ஜனதா தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி கூட்டங்களில் கலந்துகொண்டு இருந்தார். 

இந்த நிலையில் நளின்குமார் கட்டீல் எம்.பி.க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார். நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் நளின்குமார் கட்டீல் எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் அவர் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நளின்குமார் கட்டீல் எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அறிகுறியே இல்லாமல் என்னை கொரோனா தாக்கி உள்ளது. டொக்டரின் அறிவுரையின்பேரில் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்.

மக்களின் ஆசிர்வாதத்தால் கூடிய விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவேன். என்னுடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் கவனமாக இருங்கள். தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 

நளின்குமார் கட்டீல் கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டி முதலமைச்சர் எடியூரப்பா, துணை முதலமைச்சர் லட்சுமண் சவதி, அமைச்சர்கள் சுதாகர், சிவராம் ஹெப்பார் உள்ளிட்டோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதுபோல சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பெல்லி பிரகாஷ். இவர் கடந்த 2 நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு காய்ச்சல், சளி தொல்லையும் இருந்தது. இதனால் பெல்லி பிரகாஷ் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தார்.

இதில் பெல்லி பிரகாஷ் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

நளின்குமார் கட்டீல், பெல்லி பிரகாசுடன் சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்து உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad