எம்.பிக்களின் ஒருவேளை உணவுக்கு 3,000 ரூபா? - விளக்கம் கோரும் மரிக்கார் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Thursday, August 27, 2020

எம்.பிக்களின் ஒருவேளை உணவுக்கு 3,000 ரூபா? - விளக்கம் கோரும் மரிக்கார் எம்.பி.

நான் தெரிவித்த கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது : எஸ்.எம்.மரிக்கார் மறுப்பு
ஒருவேளை உணவுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3,000 ரூபா செலவிடப்படுவதாக வெளியாகியுள்ள ஊடக செய்தியின் உண்மை தன்மை தொடர்பாக சபாநாயகர் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. 

ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருவேளை உணவுக்காக 3,000 ரூபா செலவிடப்படுவதாக புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பார்க்கும், பொதுமக்கள் இது உண்மையென நினைத்து எம்மைப் பற்றி தவறான எண்ணம் கொள்வர்.

அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவத்தை பாதுகாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் நாங்கள் எதனை உணவாகக் எடுக்கின்றோம், அதற்கான செலவுகள் தொடர்பாக சபாநாயர் நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பாராளுமன்ற உணவைவிட எமது வீடுகளில் சமைக்கும் சாப்பாடு நல்லது என்றார்.

No comments:

Post a Comment