தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த கொடுத்த வாக்குறுதி என்னவானது - கேள்வி எழுப்பினார் அனுரகுமார - News View

About Us

About Us

Breaking

Saturday, August 29, 2020

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த கொடுத்த வாக்குறுதி என்னவானது - கேள்வி எழுப்பினார் அனுரகுமார

தமது சமூகத்துக்குள் ஒழிந்திருக்கும் பயங்கரவாதத்தை, முஸ்லிம் சமூகம் ஒழிக்க  வேண்டும் - அநுரகுமார ~ Jaffna Muslim
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மார்ச் மாதம் முதலாம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய்க் கொடுப்பனவு வழங்கப்படும் என சபையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த வாக்குறுதி என்னவானது, ஏன் இம்முறை இடைக்கால கணக்கறிக்கையில் அதற்கான எந்தவித வேலைத்திட்டமும் உள்வாங்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அரச இடைக்கால கணக்கறிக்கை மீதான் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பினார். 

அவர் இது குறித்து மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவு பிரச்சினை எழுந்த வேளையில் பெப்ரவரி மாதத்தில் இது குறித்து பிரதமரிடம் நான் கேள்வி எழுப்பினேன். இதன்போது மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் பாராளுமன்றத்தில் வாக்குறுதி வழங்கினார். 

கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் தோட்டக் கம்பனிகளுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதா என நான் கேள்வி எழுப்பிய வேளையில் அப்போது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான ரொமேஷ் பத்திரன, "இன்னும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, விரைவில் தீர்மானம் ஒன்று எட்டப்படும்' என கூறி மேலதிக காரணிகளை கூற முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் குறிக்கிட்டு என்னிடம் கூறியது என்னவென்றால் "கூறுவது நான், கண்டிப்பாக 1000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கும்" என்றார். எ

ங்கே அந்த கொடுப்பனவு, இப்போது முன்வைக்கப்பட்டுள்ள கணக்கறிக்கையில் எங்கே தோட்டத் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவு கணக்கு வழக்கு, இதில் ஏன் அவை உள்வாங்கப்படவில்லை என சபையில் கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment