1,000 ரூபா சம்பள உயர்வு உறுதியானது - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

1,000 ரூபா சம்பள உயர்வு உறுதியானது - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

நிமல் சிறிபால டி சில்வா Archives - Sri Lanka Tamil News - Newsfirst |  News1st | newsfirst.lk | Breaking
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும். தொழில் அமைச்சர் என்ற வகையில் இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவேன் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

பொதுத் தேர்தலின் போது பெருந்தோட்ட மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினர். இதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி சரியக்கூடியதாக இருந்தது. எனவே, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். பெருந்தோட்ட தொழிலாளர்களை நாம் மறக்கமாட்டோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad