புதிதாக துளிர்விடும் இனவாத கும்பலும், சிந்தனை செய்ய வேண்டிய தருணமும் - News View

About Us

About Us

Breaking

Monday, July 27, 2020

புதிதாக துளிர்விடும் இனவாத கும்பலும், சிந்தனை செய்ய வேண்டிய தருணமும்

இலங்கை சுதந்தரம் பெற்ற வரலாறு - முழு ...
ஏ. எம். எம் பர்ஹான்

சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக அமைந்த விடயமே கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக அரங்கேரிய இனவாத கும்பலின் போராட்டம். 

இலங்கை பல மொழிகள் பேசும் பல்லின சமூகத்தவர்களும் கூட்டாக வாழும் ஒரு சுதந்திரமான தீவு ஆகும். இதில் சிங்களவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாகவும் (70.2%) ஏனைய சிறுபான்மை இனத்தவர்களான இந்துக்கள் (12.6%), முஸ்லிம்கள் (9.7%), கிறிஸ்தவர்கள் (7.4%) மற்றும் ஏனையவர்கலும்(மதம் சார்ந்தோர் மற்றும் இறை நம்பிக்கை இல்லாதோர்) வாழ்கின்றனர். ஐந்து வருடத்திடற்கு ஒரு முறை ஆட்சியாளர்கள் மாற்றம் அடைவது போல் இனவாத கும்பல்களே மாற்றம் பெறுகின்றன ஆனால் இனவாதம் புதிது புதிதாக தோற்றம் அடைந்த வண்ணமே உள்ளன. 

முப்பது வருட யுத்தம் மற்றும் ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதல் போன்ற கசப்பான சம்பவங்களை எம் வாழ்வில் சந்தித்த நாம் அதில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவங்கள் குறைவானதே. உலக நாடுகள் பல இன்று பல்வேறு துறைகளிலும் முன்னேறி பல சாதனைகள் புரியும் காலகட்டத்தில் வாழும் நிலையில் இன்னும் நாம் இனவாதம் கலந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனையான ஒரு விடயமே. 

நேற்றைய இனவதாக்கும்பலின் போராட்ட சம்பவத்தினை நோக்கும் பொழுது பின்னணியில் பல்வேறு துறையினரதும் தொடர்பு இருப்பதாகவே சந்தேகம் எழுகின்றது. கொரொனா அச்சுறுத்தல் அதிகரித்தவாறிருக்க இன்னுமொரு பக்கம் பாராளுமன்ற தேர்தல் அமைந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தியதாகவே இந்த சம்பவம் அமைந்துள்ளது. 

இனவாதிகளின் கோசமாக ஒரே நாடு ஒரே சட்டம் என்றதாக அமைந்திருந்தது. சுதந்திரமான இந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய " எந்த ஒரு நபரும் சிந்தனை, மனசாட்சி மற்றும் மதம் என்பவற்றிக்கான சுதந்திரத்திற்கு உரித்துடயவர் ஆவார்". முஸ்லிம்களின் காதி நீதிமன்றத்தை இல்லாது செய்தல் மற்றும் புர்காவிற்கான நிரந்தர தடை வேண்டும் என்றதாகவே இனவாதிகள் பதாதைகள் ஏந்திய வண்ணம் காணப்பட்டனர். இவ்வாறு காலம் காலமாக நடந்து வரும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத செயற்பாடுகளில் பல முயற்சிகல் எட்டாக்கணியாகவே உள்ளது. 

கடந்த காலங்கள் தொட்டு இன்று வரை முஸ்லிம்கள் மீது பல்வேறு இனவாத தாக்குதல்களும் உரிமை மீறல்களும் அமைந்த வண்ணமே உள்ளன தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் மற்றும் திகன,பேருவளை சம்பவம். ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாக கொண்டு முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்பட்ட சம்பவம்(தற்காலிக புர்கா தடை, உத்தரவு பத்திரங்கள் இன்றிய முஸ்லிம்கள் கைது மற்றும் சுற்றி வளைப்பு சோதனைகள்) மற்றும் தற்போதானா கொரோனா மூலம் மரணமடையும் ஜனாஸா எரிப்பு விவகாரங்களை குறிப்பிடலாம்.

எது எவ்வாறாயினும் நேற்றைய சம்பவம் தொடர்பில் இனவாதிகளின் மீது இதுவரை அரச சார்பில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்றுக்கொள்ளாதிருப்பது அரசின் மீதான நம்பிக்கையில் கலங்கம் நிறைந்ததாகவே மக்கள் நோக்குகின்றனர். மேலும் போராட்ட இனவாதிகள் அதிகமானோர் முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையினை அணிந்ததாவே நின்றிருந்தனர். ஒரு சமூகத்தினை இழிவு படுத்தவும் அதில் அரசியல் செய்யவுமே இவ்வாறான நாடகங்கள் அரங்கேற்ற படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாயினும் இலங்கை வாழ் ஒவ்வொரு குடிமகன் மனதிலும் மதம், மொழி சார்ந்த இனவாத கருத்துக்கள்,எண்ணங்களை கலையாத வரை இவ்வாறான இனவாத தீயில் குளிர்காய்பவர்களுக்கு நாம் என்றும் பகடக்காயகவே அமைவோம். பல்வேறு வளங்களை கொண்டுள்ள எமது நாட்டில் வாழும் நாம் கடந்த காலத்தை அடிப்படையாக வைத்து இன்னுமின்னும் எமக்குள் முரண்பட்டு கொள்வதனால் எந்த வித வளர்ச்சியையும் நாம் அடைய போவதில்லை.

No comments:

Post a Comment