அநுரகுமார, ஷானி அபேசேகர அழைக்கப்படமாட்டார்கள் - மேன்முறையீட்டு மன்றில் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு உறுதியளிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, July 27, 2020

அநுரகுமார, ஷானி அபேசேகர அழைக்கப்படமாட்டார்கள் - மேன்முறையீட்டு மன்றில் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு உறுதியளிப்பு

மனுக்கள் பரிசீலிக்கப்படும் வரை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் சாட்சியம் அளிப்பதற்கு அழைக்கப்படமாட்டார்கள் என, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்துள்ளனர்.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல் தொடர்பான முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டிருந்தது, குறித்த முறைப்பாட்டிற்கு அமைய, சாட்சியம் அளிப்பதற்காக முன்னிலையாகுமாறு அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட அழைப்பாணையை இரத்துச் செய்யுமாறு கோரி அநுரகுமார திஸாநாயக்கவும், ஷானி அபேசேகரவும் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனுக்கள் இன்று (27) மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, அவர்கள் இருவரையும், சாட்சியம் அளிப்பதற்கு அழைக்கப்படாமல் இருப்பதற்கு இவ்வாறு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இம்மனுத் தொடர்பான மேலதிக பரிசீலனை எதிர்வரும் செப்டெம்பர் 29ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad