ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லையாம்” என்பதை போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு திகழ்கிறது - அங்கஜன் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லையாம்” என்பதை போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு திகழ்கிறது - அங்கஜன்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ...
“ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லையாம்” என்பதை போல் தமிழ் தேசிய கூட்டமைப்பு திகழ்கிறது என முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் விமர்சித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற பிரசாரகூட்டம் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது எங்களுடைய நோக்கம் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களை அடுத்த ஐந்து வருடத்தில் முதன்நிலையாக்குவது அதில் விவசாயம், கல்வி, பொருளாதாரம், கடற்றொழில் போன்ற இழந்த பலவற்றை பெற வேண்டும் என்பதே.

இளைஞர்களுக்கு அரச தொழில் வாய்ப்பு, தனியார் தொழில் வாய்ப்பு, சுய தொழில் வாய்ப்பு போன்றவற்றை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளார் சுமந்திரன் கடந்த நான்கரை வருடங்களாக அரசாங்கத்துடன் இருந்தும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்காதவர். அவர் எங்களை நம்ப வேண்டாம் என கூறுகிறார். 

நாங்கள் வேலை வாய்ப்பை பெற்று தருவோம் என்று கூறவில்லை முயற்சி செய்யுங்கள் உறுதுணையாக இருப்போம் என கூறுகிறோம், வெளிமாவட்டத்தில் இருந்து இங்கு அரச வேலைக்கு வருபவர்களை தடுத்து நிறுத்துவோம் என கூறுகிறோம்.

நான் இப்போது செய்வேன் என கூறுவதை கடந்த நான்கரை வருடம் ஆட்சியின் பங்காளிகள் செய்தார்களா ? இல்லை எங்கள் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றிய தீர்வை முன்வைக்கும் போது அவர்கள் கூறுகிறார்களாம் எங்களை நம்ப வேண்டாம், நாங்கள் வேலை வாய்ப்பு தருவது கஷ்டம், அரசாங்கத்தில் இப்போது கூடுதலான உத்தியோகத்தர்கள் இருக்கின்றனர் இனி புதிதாக எடுக்க மாட்டார்கள், நாங்கள் தற்சார்பு பொருளாதாரம் மூலம் எதிர்காலத்தில் உங்களை நீங்களே கட்டியெழுப்பும் வசதியை செய்து தருகிறோம் என பிரச்சாரம் செய்கிறார்களாம். 

“ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லையாம்” என்பதை போல் நான்கரை வருடங்கள் அரசின் பங்களாளிகளாக இருந்து எங்களுக்கு எங்கள் இளைஞர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு கூட பெற்று தராதவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் பெற்று கொடுத்தனர்.

முன்னாள் எம்.பி சரவணபவன் இங்கு வந்து வாக்கு கேட்கிறார் ஆனால் இங்கு இதுவரைக்கும் எம் இளைஞர்களுக்கும் ஒரு வேலை வாய்ப்பை பெற்று கொடுத்து இருக்கிறாரா இல்லை ஆனால் தன் மகளுக்கு வேலை வாய்ப்பை பெற்று கொடுத்து உள்ளார் என்பதே உண்மை என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad