வடக்கு, கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த தயாரா ? - மகிந்தவுக்கு ஸ்ரீதரன் சவால் - News View

Breaking

Post Top Ad

Thursday, July 30, 2020

வடக்கு, கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த தயாரா ? - மகிந்தவுக்கு ஸ்ரீதரன் சவால்

வடக்கு, கிழக்கில் பொதுசன வாகெடுப்பை ...
வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ்விற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.ஸ்ரீதரன் சவால் விடுத்துள்ளார்.

நேற்றையதினம் உருத்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கள பேரினவாத அரசும் பேரினவாத தேரர்களும் தமிழர்கள் மீதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அவதூறு செய்துவருகிறார்கள், பேரினவாதத்தை கக்கி வருகிறார்கள் தமிழர்களுக்கு எதனையும் வழங்க தயார் இல்லை என்கிறார்கள் இந்த மாதத்தில் மட்டும் பல்வேறு இனவாத அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்

மகிந்த ராஜபக்ஷவை நான் நேரடியாகக் கேட்கின்றேன் நீங்கள் எங்களுக்கு ஒரு தீர்வைத்தர தயார் இல்லை என்றால் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து அவர்களின் இழந்து போன இறமையின் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு தீர்வை தருவதற்கு உங்களுடைய அரசு அல்லது சிங்கள சமூகம் தயாரில்லை என்றால் தமிழர்கள் தனித்துவமான இனமாக தாங்கள் தங்களுக்கே உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கேடுப்பை நடத்த நீங்கள் தயாரா?

இவை எதனையும் தரமுடியாது என்றால் பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கேடுப்பை நடத்த நீங்கள் தயாராகுங்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் தாங்கள் சிங்கள தேசத்தோடு சேர்ந்து வாழ முடியுமா சிங்கள மக்களோடு இனியும் ஒற்றுமையாக இருக்க முடியுமா சிங்கள தலைவர்களின் ஆட்சியின் கீழ் இருக்க முடியுமா என்பதற்கு நாங்கள் ஜனநாகய ரீதியாக வாக்களிக்க தயார்.

ஆகவே எங்களிடம் நீங்கள் வாக்களிப்பை நடத்துங்கள் நாங்கள் அந்த வாக்களிப்பை செய்து நாங்கள் ஒரு தனித்துவமாக எங்களின் சுயநிர்னய உரிமையின் அடிப்படையில் எங்களின் பரம்பரை தாயகத்தின் அடிப்படையில் எங்களுக்கே உரித்தான தமிழ்த் தேசிய உரிமைகளின் அடையாளங்களோடு நாங்கள் பிரிந்து செல்ல தயாராக இருக்கின்றோம். நீங்கள் அதற்கு தயாரா அப்படியனால் உடனே வடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்துங்கள்.

ஒரு தீர்வும் தர முடியாது தமிழர்களை வாழவும் விட முடியாது என்றால் உலகப்பந்திலே இருக்கின்ற ஒரு தேசிய இனம் தன்னை இழந்து விட முடியுமா அதனால் இவற்றை செய்ய நாம் தயார் என மேலும் குறிப்பிட்டார்.

குறித்த பிரச்சாரக் கூட்டமானது உருத்திரபுரம் பகுதியில் பிற்பகல் 7 மணிக்கு கட்சியின் செயற்பாட்டாளர் சாந்தன் தலைமையில் நடைபெற்றது. இப்பிரச்சாரக் கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர் வேழமாலிதன், பிரதேச சபை உறுப்பினர் கணேசலிங்கம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad