வன்னி மக்களின் பிரச்சினையை அரசுடன் பேசியே தீர்க்க முடியும் - அதற்கு அரசு சார்பான பிரதிநிதி அவசியம் என்கிறார் கனகரட்ணம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

வன்னி மக்களின் பிரச்சினையை அரசுடன் பேசியே தீர்க்க முடியும் - அதற்கு அரசு சார்பான பிரதிநிதி அவசியம் என்கிறார் கனகரட்ணம்

வன்னி மக்களின் பிரச்சினைகளை பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு அரசாங்கத்துடன் பேசியே தீர்க்க முடியும். அதற்கு தமிழ் பிரதிநிதி ஒருவர் ஆளும் அரசாங்க கட்சியின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சதாசிவம் கனகரட்ணம் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும் கூறுகையில், போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் வன்னி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள், வீட்டுத்திட்ட பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாத நிலை காணப்படுகின்றன. அத்துடன் படித்த இளைஞர் - யுவதிகளும் வேலை வாய்ப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரச்சினைகளை அரசாங்கத்தால் மட்டுமே தீர்க்க முடியும். அதற்கு அரசாங்கத்தில் இருந்து செய்யக்கூடிய பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு பிரதிநிதியால் மட்டுமே செய்ய முடியும்.

வன்னியில் கடந்த பல வருடங்களாக ஆளுக் கட்சியில் தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யாமையால் சகோதர இனத்தவர்களே அமைச்சர்களாக தெரிவாகியிருந்தனர். ஆனால் அரசாங்கம் தமிழ் பிரதிநிதி ஒருவருக்கு அமைச்சுப் பதவி கொடுக்க தயாராகவே இருக்கிறார்கள். இந்த அரசாங்கத்தின் ஆட்சியே குறைந்தது 10 வருடங்களுக்கு நீடிக்கப் போகிறது என்றார்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad