'ராஜபக்ஷக்களின் ஒட்டுமொத்த குடும்பமுமே மாபியா படைகளையே கொண்டுள்ளது' : சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, July 30, 2020

'ராஜபக்ஷக்களின் ஒட்டுமொத்த குடும்பமுமே மாபியா படைகளையே கொண்டுள்ளது' : சம்பிக்க ரணவக்க

நாட்டை ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு ...
(நா.தனுஜா)

ராஜபக்ஷாக்களின் ஒட்டுமொத்த குடும்பமும் ஹெரோயின் படை, எதனோல் மாஃபியா படை, மணல் கொள்கை உள்ளடங்கலான பல்வேறு செயற்பாடுகளினால் சூழலை மாசுபடுத்தும் படை, பாதாள உலகக்குழுக்கள் ஆகிய நாற்படைகளை மையப்படுத்தியே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் ஆற்றிய உரையின் காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் சம்பிக்க ரணவக்க பகிர்ந்திருக்கின்றார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது இந்த நாட்டை நன்கு கற்ற, அறிவுடையவர்களே நிர்வகிக்கப் போகின்றார்கள் என்பதுதான் மக்களுக்கு வழங்கப்பட்ட மிக நீண்ட கயிறாகும். தற்போது கம்பஹாவிலிருந்து சில படித்தவர்கள் வந்திருக்கிறார்கள் இல்லையா? நீர்கொழும்பிலிருந்து வந்திருக்கும் கற்றறிந்தவர் யார்? மினுவங்கொடவில் இருந்து தெரிவான அறிஞர் யார்? திவுலப்பிட்டியிலிருந்து வந்த தொழிற்சங்கவாதி யார்?

ஏற்கனவே இருந்த பழைய ஹெரோயின் கடத்தல்காரர்கள், பாதாள உலகக்குழுவினர், மணல் கொள்ளை மாஃபியாகாரர்கள்தான் இன்று ராஜபக்ஷாக்களின் சேனையாக (படை) இருக்கின்றார்கள். முற்காலத்திலிருந்த நாற்படை போன்று ராஜபக்ஷாக்களுக்கும் சிறப்பானதொரு நாற்படை இருக்கின்றது. 

முதலாவது நாட்டில் ஹெரோயினை விற்று, அந்த வியாபாரத்தின் ஊடாக பணம் சம்பாதிக்கின்ற படை, இரண்டாவது பெருமளவான கொள்கலன்களில் எதனோலை நாட்டிற்குள் கொண்டுவருகின்ற, அந்தக் கொள்கலன்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியின் கையெழுத்தூடாக நிதியமைச்சிற்கு அறிவித்து, எதனோல் வியாபாரத்தினூடாக வரும் பெருந்தொகை பணத்தை அரசியலுக்கு செலவிடுகின்ற எதனோல் மாஃபியா படை, மூன்றாவது கல் மற்றும் மணல் போன்றவற்றை அகழ்ந்தெடுத்து நாட்டின் வனப்பகுதிகளை நாசமாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற சூழலை மாசாக்கும் படை, நான்காவது பாதாளக்குழுக்கள் என்பவையே அந்த நாற்படையாகும்.

ராஜபக்ஷாக்கள் ஆட்சிக்கு வர முன்னர் சூழலுக்கு நேயமான தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதாகவும், காபன் அற்ற சூழல் என்று சான்றளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள். ஆனால் ஆட்சிபீடமேறிய பின்னர் சுமார் 6 மாதகாலத்திற்கு சுற்றுச்சூழலைக் கொள்ளையடிப்பதற்கு இடமளித்தார்கள். 

மகாவாலி கங்கை, களு கங்கை, களனி கங்கை, உமா ஓயா, தெதுறு ஓயா உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் தற்போது முற்றாகப் பாதிப்படைந்திருக்கின்றன. மீண்டும் பல வருட காலத்திற்கு பழைய நிலைக்குத் திருப்பமுடியாதளவிற்கு பாரிய சூழல் மாசடைவை ஏற்படுத்த இந்த அரசாங்கம் இடமளித்திருக்கிறது.

No comments:

Post a Comment