வெளியேறினார் சங்கக்கார, நாளை மஹேலவுக்கு அழைப்பு - 9 மணி நேரதிற்கும் அதிகமாக வாக்குமூலம் பதிவு - News View

Breaking

Post Top Ad

Thursday, July 2, 2020

வெளியேறினார் சங்கக்கார, நாளை மஹேலவுக்கு அழைப்பு - 9 மணி நேரதிற்கும் அதிகமாக வாக்குமூலம் பதிவு

விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார, சுமார் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்டநிர்ணய சதி தொடர்பில், அப்போதைய தலைவரான குமார் சங்கக்காரவை வாக்குமூலம் வழங்குவதற்கு வருமாறு இன்று (02) முற்பகல் 9.00 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அரவிந்த டி சில்வா (ஜூன் 30) 6 மணி நேர வாக்குமூலமும், உபுல் தரங்க (ஜூலை 01) 2 1/2 மணி நேர வாக்குமூலமும் இவ்வாறு வழங்கியிருந்தனர்.

இதேவேளை, நாளையதினம் (03) இது தொடர்பில் வாக்குமூலம் வழங்க மஹேல ஜயவர்தனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad