இராஜாங்கனையில் அமுலில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடு ஜூலை 31 இல் முற்றாக நீக்கம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

இராஜாங்கனையில் அமுலில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடு ஜூலை 31 இல் முற்றாக நீக்கம்

UAE இலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா ...
கொரோனா பரவல் காரணமாக இராஜாங்கனை பகுதியில் அமுலில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாடு ஜூலை 31 இல் முற்றாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் ஒரு சில பகுதிகளில் இப்போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக இராஜாங்கனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விதிக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதற்கமைய, கலுன்தேகம, சிறிமாபுர, யாய 01 (சந்தையின் பின்புற பகுதி தவிர்ந்த) யாய 02ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் (27) போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யாய 01 (சந்தையின் பின்புற பகுதி), யாய 03, யாய 04, யாய 05, யாய 06/ அங்கமுவ ஆகிய பகுதிகளில், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (31) பின்னர், போக்குவரத்து கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad