மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 18 வருட கடூழியச் சிறை! - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 18 வருட கடூழியச் சிறை!

குடும்பப்பெண்ணுடன் உறவு ...
பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு அவரது தந்தைக்கு 18 ஆண்டுகள் கடுழீயச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

வவுனியா அலகல்ல என்ற இடத்தைச் சேர்ந்த அன்ரன் சில்வா என்ற நபருக்கே தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு நீரூபிக்கப்பட்டதையடுத்து நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளில் 15 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியான டீமன் சில்வாகே அன்ரன் சில்வா என்பவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விளக்கம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது. வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் வழக்கை நெறிப்படுத்தினார்.

வழக்கில் முதலாவது சாட்சியான பாதிக்கப்பட்ட சிறுமி தனது சாட்சியத்தில் தனக்கு தந்தையால் நடந்தவற்றை விவரித்தார். சிறுமியின் சாட்சியத்தை நிரூபிக்கும் வகையில் அவரது தாயாரின் சாட்சியமும் அமைந்தது.

நிபுணத்துவ சாட்சியத்தில் சட்ட மருத்துவ அதிகாரி, சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் அதிகாரிகளும் சாட்சியமளித்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் நேற்று (29) புதன்கிழமை வழங்கினார். எதிரி மீதான இரண்டு குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுனரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. அத்தோடு 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வழங்கத் தவறின் 2 வருடங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad