முகத்துவாரத்தை திறந்து நீரை வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரிடம் விடுத்த வேண்டுகோள் அதிகாரிகளால் நிராகரிப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, June 27, 2020

முகத்துவாரத்தை திறந்து நீரை வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரிடம் விடுத்த வேண்டுகோள் அதிகாரிகளால் நிராகரிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து நீரை வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட விவசாயிகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கரைவாகுப்பற்று நற்பிட்டிமுனை கிட்டங்கி நாவிதன்வெளி போன்ற பகுதிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தமது செய்கை நிலங்கள் முழுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதால் அதனை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவ்விதம் சுமார் ஐயாயிரம் எக்கர் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரோடு தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாறியுள்ளனர்.

இதன் அடிப்படையில் சனிக்கிழமை 27.06.2020 மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் முகத்தை திறந்து விடுவதைப்பற்றி மாவட்ட செயலணியின் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் கலாமதி தலைமையில் நடைபெற்றது.

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் வன்னியசிங்கம் கலைவாணி குறிப்பிடுகையில் சாதாரனமாக 112 மில்லி மிற்றர் நீர் நிரம்பியதன் பின்னர்தான் முகத்துவாரம் திறப்பது தொடர்பில் ஆராயப்படும் தற்போது 40 மில்லி மிற்றர் இருப்பதனால் முகத்துவாரத்தைத் திறப்பதற்கான அவசியம் இல்லை என குறிப்பிட்டார்.
அதேவேளை மாட்டத்தில் தற்போது வறட்சி நிலவுவதால் 9 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம் சியாத் குறிப்பிட்டார்

இக்கூட்டத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் முகத்துவாரம் ஆற்றுவாய் உடனடியாகத் திறந்து விட தேவைப்பாடு எமது மாவட்டத்திற்கு இல்லை என்றும் அவ்வாறு திறக்கப்படுவதால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் வாவி மீனவர் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதாலும் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் இல்லாமல் வறண்டு போகலாம் என்பதாலும் ஆற்றுவாய் எனவும் கருதப்பட்டதற்கு இணங்க முகத்துவாரத்தைத் தற்போதைக்குத் திறப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மத்திய நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் எஸ்.எம்.பி. அசார் மாகாண நீர்பாசன திணைக்களப் பணிப்பாளர் எஸ். இராஜகோபாலசிங்கம் கமநல திணைக்கள் உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் மாநகர உதவி ஆணையாளர் யூ. சிவராஜா மீன் பிடித்திணக்கள உத்தியோகத்தர்கள் விவசாயிகள் மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு முகத்துவாரம் கடந்த 2018ம் ஆண்டு தறிந்து விடப்பட்டதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் கழிமுகப் பரையோரப் பிரதேசங்கள் கடும் வறட்சியை எதிர்கொண்டதோடு விவசாயிகள், கால்நடைகள், விலங்குகள் என்பன நீரின்றி அலைய நேரிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad