கொரோனாவின் பின்னர் மட்டு. மாவட்டத்தில் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க தயார் நிலையில் - News View

Breaking

Post Top Ad

Saturday, June 27, 2020

கொரோனாவின் பின்னர் மட்டு. மாவட்டத்தில் தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க தயார் நிலையில்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முடக்கம் மற்றும் ஊரடங்குச் சட்டம் என்பன முழுமையான நீக்கப்பட்டதையடுத்து எதிர்வரும் 29ம் திகதி முதல் தனியார் கல்வி நிலையங்களில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன.

மட்டக்களப்பு மாவடட்டத்தில் இதற்கான தயார் படுத்தும் பணிகளில் தனியார் பிரத்தியேக வகுப்பு நிலையங்கள் ஈடுபட்டுள்ளன.

சமுக இடைவெளிகளைப் பேணி மாணவர்கள் அமரக்கூடியவாறு இருக்கைககள் தயார்படுத்தபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இம்மாவட்டத்தில் பெருமளவிலான தனியார் வகுப்பு கல்வி நிலையங்கள் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

ரீ.எல்.ஜவ்பர்கான் - மட்டக்களப்பு நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad