கருணா அம்மான் பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடாது - ஓமல்பே சோபித தேரர் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 30, 2020

கருணா அம்மான் பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடாது - ஓமல்பே சோபித தேரர் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கருணா அம்மானை நீக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்திருக்கின்றோம் என ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கருணா அம்மான் விடுதலை புலிகளின் கிழக்கு பிராந்திய ஆயுத படைகளின் தலைவராக இருந்துகொண்டு அவர் மேற்கொண்ட கொலைகள் தொடர்பாக அவரின் நாவினாலே தெரிவித்திருந்தார். 

3 ஆயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் தெரிவித்த கூற்று தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு முறையிட்டிருக்கின்றோம்.

அத்துடன் கருணாவின் கூற்றின் மூலம் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் பாராளுமன்ற சட்டத்தின் 81 ஆவது சரத்து மீறப்பட்டிருக்கின்றது. 

அதனால் உடனடியாக அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கின்றோம்.

கொலை குற்றச் செயலை செய்ததாக உறுதி மொழி வழங்கும் கருணா அம்மானுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அனைவரும் இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும். 

அதேபோன்று தற்போது கருணாவை தூய்மைப்படுத்த சில அரசியல் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். அவர்கள் தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad