மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் டெங்கொழிப்பு சிரமதானம் - News View

Breaking

Post Top Ad

Monday, June 29, 2020

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் டெங்கொழிப்பு சிரமதானம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் சிரமதான நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக திங்கட்கிழமை 29.06.2020 மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலக வளாகத்தில் பிரதி திங்கட்கிழமைகளில் பி.ப. 3.00 மணி தொடக்கம் பி.ப. 4.15 வரை நடைபெற்று வருகின்றது.

இதேவேளை அனைத்து அரச அலுவலகங்கள், பாடசாலைகள், அரச கட்டிடங்கள் அனைத்திலும் இச்சிரமதானப் பணிகள் இடம்பெறவேண்டும் என்பதுடன், இச்சிரமதானம் நடைபெற்றமை தொடர்பாக குறித்த பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உரிய அரச அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் அரச கட்டிடங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad