ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் வாஸ்தீன் ஹிஸ்புல்லாவுடன் இணைவு - News View

Breaking

Post Top Ad

Tuesday, June 30, 2020

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் வாஸ்தீன் ஹிஸ்புல்லாவுடன் இணைவு

மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.வாஸ்தீன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

மிக நீன்ட கால முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளியான இவர் நாட்டின் சமகால அரசியல் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் ஆளுமை மிக்க பலமான அரசியல் தலைமை ஒருவரை ஆதரிப்பது என தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக எமக்கு தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (30) கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் தனது இல்லத்தில் வைத்து தமது ஆதரவாளர்களுடன் மேலும் ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றியினை உறுதி செய்து கொள்ள இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad