மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு

ஏ.எச்.ஏ. ஹூஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜுன் 12 ஆம் திகதி தொடக்கம் ஜுன் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

இவ்விதம் டெங்குத் தொற்றுக்கு ஆளாகிய அனைவரும் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். இறப்புக்கள் எதுவும் சம்பவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேரும், கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை பிரிவில் 3 நோயாளர்களும், ஆரையம்பதி பிரிவில் 2 பேரும், வாழைச்சேனை களுவாஞ்சிக்குடி ஆகிய பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 20 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ளனர். 

இதேவேளை வாகரை, செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு, காத்தான்குடி, வெல்லாவெளி, கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

No comments:

Post a Comment