அலி சப்ரிக்கு ராஜபக்ஷ குடும்பம் கடமைப்பட்டுள்ளது - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

அலி சப்ரிக்கு ராஜபக்ஷ குடும்பம் கடமைப்பட்டுள்ளது - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க

விலைபோகாத அரசியல்வாதிக்கு அலி சப்ரி சிறந்த உதாரணம் ஏனைய சில முஸ்லிம் அரசியல் தலைவா்கள் போன்று ஒரு போதும் அவர் விலைபோனதில்லை என தெஹிவளை கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க தெரிவித்தார். 

தெஹிவளை பள்ளிவாசல் சம்மேளனம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய போதே தனசிறி இதனைக் குறிப்பிட்டார். 

அலி சப்ரி விலைபோகாத அரசியல்வாதி. இவருக்கு அமைச்சர் பதவியோ அல்லது பிரதியமைச்சர் பதவியோ கிடைப்பது உறுதி. சட்டத்தரணி அலி சப்ரிக்கு ராஜபக்ஷ குடும்பம் ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளது. 

கடந்த 14 வருடங்களாக இவர்களது பல வழக்குகளில் ஆஜரான அலி சப்ரி, ஒரு சதமேனும் அறவிடவில்லை. எத்தனையே பிரபல்யமான சட்டத்தரணிகள் இருந்தும் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு நம்பிக்கையானவராகவே அலி சப்ரி இருக்கிறார். 

அமெரிக்க பிரஜையென வழக்குத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட தடங்கலை ஏற்படுத்திய வழக்கை வென்றெடுத்தவர் இவர். எனக்கு முஸ்லிம்களுடன் நியைத் தொடர்புகள் உண்டு. தெஹிவளை கல்கிசையில் முஸ்லிம்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி அமைதியான சூழ்நிலையில் வாழ்கின்றனர்.

என்னிடம் மதவாதம் இனவாதம் இல்லை. சகலரது பிரச்சினைகளிலும் முன்னின்று உதவக்கூடிய சகலதையும் தொடா்ந்து செய்வேன் என்றார். 

(அஸ்ரப் ஏ சமத்)

No comments:

Post a Comment