இலங்கையில் 11ஆவது மரணம் பதிவு - குவைத்திலிருந்து வந்து ICU வில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதான ஆண் - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

இலங்கையில் 11ஆவது மரணம் பதிவு - குவைத்திலிருந்து வந்து ICU வில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதான ஆண்

இலங்கையில் 11ஆவது கொவிட்-19 நோய் காரணமான மரணம் பதிவாகியுள்ளது.

அண்மையில் குவைத்திலிருந்து வந்த 45 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர் நோய்த் தொற்று தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ICU இற்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மரணமடைந்துள்ளதாக, அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இறுதியாக கடந்த மே 25ஆம் திகதி 10ஆவது கொரோனா மரணம் பதிவாகியிருந்தது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்
01. ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி, 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

02. ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.

03. ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதி, 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

04. ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

05. ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

06. ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதி, 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

07. ஆவது மரணம், ஏப்ரல் 08ஆம் திகதி, 44 வயதான, கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

08. ஆவது மரணம், மே 04ஆம் திகதி, 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

09. ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதான, கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

10. ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதான, குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

11. ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.

No comments:

Post a Comment