O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களை அனுப்பவும் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 21, 2020

O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடையாள அட்டை விண்ணப்பங்களை அனுப்பவும்

எதிர்வரும் டிசம்பரில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வது தொடர்பில், அனைத்து அரசாங்க பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை மூலம் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தந்த கிராம சேவகர்களுடன் அதிபர்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதோடு, பிரதேச செயலகங்கள் ஊடாக மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவங்களை ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 400,000 மாணவர்கள் இவ்வருடத்தில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக, தங்கள் அதிபர்கள் ஊடாக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக, குருணாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம். பாலசூரிய தெரிவித்தார்.

No comments:

Post a Comment