திருகோணமலையில் உள்ளூர் துப்பாக்கியுடன் இளைஞரொருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

திருகோணமலையில் உள்ளூர் துப்பாக்கியுடன் இளைஞரொருவர் கைது

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கியுடன் இன்று (17) இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நன் ஹாமிகே இஷார டில்ஷான் (23வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் துப்பாக்கியை பயன்படுத்தி மிருகங்களை வேட்டையாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இவர் தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் இவர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடுவதற்காக காட்டுப் பகுதிக்குச் செல்லும் போது இவரை கைது செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இவர் தொடர்பில் முன் குற்றங்கள் ஏதாவது இருக்கின்றனவா என விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment

Post Bottom Ad