இலங்கையர்களை அழைத்து வர லண்டன் நோக்கு புறப்பட்டது விசேட விமானம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

இலங்கையர்களை அழைத்து வர லண்டன் நோக்கு புறப்பட்டது விசேட விமானம்

லண்டன் நகரிலிருந்து இலங்கைக்கு வர முடியாமல், அங்கு சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானமொன்று, இன்று (05) காலை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 503 எனும் விமானம், இன்று அதிகாலை 12.51 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி புறப்பட்டுள்ளது.

இன்று லண்டனுக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், பயணிகளின்றி விமான பணியாளர்களுடன் மாத்திரம் புறப்பட்டதோடு, இவ்விமானம் காலை 7.15 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது.

இவ்விமானம் இலங்கை மாணவர்களை அழைத்துக் கொண்டு நாளை (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.

இதேவேளை, லண்டனுக்கு நேற்று (04) புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானம், பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை 3.05 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad