மீள்குடியேற்றக் கிராமமான கேணிநகரில் உலருணவுப் பொருட்கள் விநியோகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 5, 2020

மீள்குடியேற்றக் கிராமமான கேணிநகரில் உலருணவுப் பொருட்கள் விநியோகம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தொற்றின் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்குச் சட்டத்தின் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான கேணிநகர் மஸ்ஜிதுல் ஹம்து பள்ளிவாயல், கேணிநகர் அபிவிருத்திக் குழு, கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் கேணிநகர் கிராமத்திலுள்ள 400 குடும்பங்களுக்கு வீடு வீடாகச் சென்று உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மஸ்ஜிதுல் ஹம்து பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் இடம்பெற்ற உதவி வழங்கும் நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஏ.எல்.அப்துல் ஹமீட், அபிவிருத்திக் குழு பிரதிநிதிகள், பள்ளிவாயல் நிருவாகத்தினர் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மஸ்ஜிதுல் ஹம்து பள்ளிவாயல், கேணிநகர் அபிவிருத்திக் குழு, கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் தனவந்தர்களின் நிதியுதவி மூலம் அன்றாடத்தொழிலின்றி வீட்டில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் வாழும் குடும்பங்களுக்கு ஊடரங்கு பாதிப்பு மற்றும் நோன்பை முன்னிட்டு குறித்த அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment