சட்டவிரோத கடற்றொழிலை தடுத்து தமது வாழ்வாதார தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

சட்டவிரோத கடற்றொழிலை தடுத்து தமது வாழ்வாதார தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

மருதங்கேணி மற்றும் தாளையடிப் பகுதி கடற்பரபுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழிலை தடுத்து நிறுத்தி தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருக்கும் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத கடற்றொழில் முறைகளை தொடர்ந்தும் பயன்படுத்துவோர் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 22.05.2020 அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசம், வடமாராட்சி வடக்கு கற்றொழிலாளர் சமாசம் மற்றும் கற்றொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், கடற்படை அதிகாரிகள, யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட மீளாய்வுக் கூட்டமொன்று நடைபெற்றது. 

இதன்போது கடற்றொழிலாளர் அமைப்பக்களின் பிரதிநிதிகள் தத்தமது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தெரியப்படுத்துகையிலேயே மேற்குறிப்பிட்ட கோரிக்கையை விடுத்துள்ளனர். 

இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில் கடற்றொழில் அமைச்சால் சில கடற்றொழில் நடவடிக்கைகளை சட்டவிரோதமானவை என குறிப்பிடப்பட்டு அவற்றை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் அத்தொழில் நடவடிக்கைகளை குறித்த பகுதிகளில் சிலர் தற்போதும் முன்னெடுத்து வருவதால் சாதாரண கடற்றொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. 

குறிப்பாக இவ்விரு பகுதிகளிலும் உழவு இயந்திரங்களை கொண்டு மேற்கொள்ளப்படும் கடல் தொழில் நடவடிக்கை வெளிச்சம் பாய்ச்சி மேற்கொள்ளும் அட்டை பிடிப்பு உள்ளிட்ட பல தொழில் நடவடிக்கைகள் கடற்றொழிலாளர்களது ஆலோசனைக்கு அமைய தடை செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போதும் அத்தகைய சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை சிலர் முன்னெடுத்து வருவதால் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள துறைசார் தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். 

கடற்றொழிலாளர் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் ஆராய்ந்தறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்துவதுடன் மீறுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதுள்ளதுடன், இவ்விடயத்தினை கரையோர காவற் படையினரும் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

சுகாதார தரப்பினரது அறிவுறுத்தலுக்கு அமைய நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு கிருமி நாசினிகள் அடிக்கடி தெளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad