கடமை நேரத்தில் உயிரிழந்த ஆசிரியரின் நினைவாக வாழைச்சேனையில் நடைபெற்ற இரத்ததானமுகாம் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

கடமை நேரத்தில் உயிரிழந்த ஆசிரியரின் நினைவாக வாழைச்சேனையில் நடைபெற்ற இரத்ததானமுகாம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் இரத்ததான முகாம் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கணித பாட ஆசிரியர் இறைபதமடைந்த எஸ்.ஹேமராஜனின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வருடா வருடம் நடைபெறும் இரத்ததான நிகழ்வு கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய குருதி நன்கொடையினை வழங்கி வைத்தனர்.
இதில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்திய அதிகாரி செ.விருஷகவி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் பொறுப்பாளர் ரி.ஜெயராஜ் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2013ம் ஆண்டு கடமை நேரத்தின் போது உயிரிழந்த கணித பாட ஆசிரியர் எஸ்.ஹேமராஜனின் நினைவாக பாடசாலை சமூகத்தினரின் ஏற்பாட்டில் உயிரிழந்த ஆசிரியரை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் இரத்ததான முகாம் நடைபெற்று வருவதாக கல்லூரி அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்தார்.

குறித்த இரத்ததான நிகழ்வுக்கு வாழைச்சேனை குட்வில் தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் லயன்.கே.லோகேந்திரன் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad