கிண்ணியாவில் ஹேரொயின் போதைப் பொருளுடன் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

கிண்ணியாவில் ஹேரொயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை இன்று (17) கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹ்ரூப் நகர், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா வெள்ளை மணல் பகுதியில் வைத்து ஒருவரிடம் 1500 மில்லி கிராம் ஹேரொயின் போதைப் பொருளும், மற்றொருவரிடம் ஒரு கிராம் போதைப் பொருளும் வைத்திருந்த நிலையில் கிண்ணியா போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment

Post Bottom Ad