மேல்கொத்தமலை வான் கதவு திறப்பு - நீர்வீழ்ச்சி பெருக்கெடுப்பு! - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

மேல்கொத்தமலை வான் கதவு திறப்பு - நீர்வீழ்ச்சி பெருக்கெடுப்பு!

மேல்கொத்தமலை நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக மேல்கொத்மலை நீர்தேக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலவாகலை பிரதேசத்தில் அதிக மழை பெய்து வருகின்றமையினால் நீர்தேக்கத்தில் நீர்மட்டம் சடுதியாக நிரம்பியுள்ளதால், வான் கதவு ஒன்று இன்று (18) மதியம் 12.30 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிக மழை பெய்யுமாயின் ஏனைய 4 வான் கதவுகளும் திறக்கப்படும் எனவும் கொத்தமலை ஓயா ஆற்று பகுதியில் வசிப்போர் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, டெவன் மற்றும் சென்கிளேயர் நீர்வீழ்ச்சிகளும் பெருக்கெடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad