டெங்கு, எலிக் காய்ச்சல் கட்டுப்படுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

டெங்கு, எலிக் காய்ச்சல் கட்டுப்படுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலான தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய்கள் வேகமாக பரவுவதாகவும் இந்த வருடத்தில் மாத்திரம் 18,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இதற்கிணங்க கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைக்கு சமமானதாக ஏனைய வைரஸ் தொற்று நோய்களையும் கட்டுப்படுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் எலிக் காய்ச்சல் காரணமாக சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா வைரஸ் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட மிக அதிகமான எண்ணிக்கையாகும் என சங்கத்தின் செயலாளர் உபுல் ரோகண தெரிவித்தார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் சுகாதார முறைமைக்கு சமமானதாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் தொடர்பில் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்சத்தில் சமூகத்தில் பாரிய சுகாதார சீர்கேடுகளை எதிர்காலத்தில் எதிர்நோக்க நேரிடும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

உள்ளூராட்சி சபை நிறுவனங்களில் குப்பை கூளங்கள் அகற்றும் நடவடிக்கைகளில் சிக்கல்கள் நிலவுவதால் குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கும் நிலையில் டெங்கு உற்பத்தியாகும் நிலை அதிகரிக்கலாம் என்றும் உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad