ஜாமிஆ நளீமிய்யாவின் கெளரவ பணிப்பாளர் கல்விமான் கலாநிதி சுக்ரியின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் - முன்னாள் முதலமைச்சர் நஷீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 19, 2020

ஜாமிஆ நளீமிய்யாவின் கெளரவ பணிப்பாளர் கல்விமான் கலாநிதி சுக்ரியின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் - முன்னாள் முதலமைச்சர் நஷீர் அஹமட்

சமூகத்தில் எண்ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறைகின்றார்கள். அவர்களுள் பலர் தங்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களது மறைவோடு அவர்களது நினைவும் மறக்கப்படுகின்றது. ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் காலத்திற்குக்காலம் சிலர் தோன்றுகின்றார்கள். அவர்கள் தமக்காக மட்டும் வாழ்ந்தவர்கள் அல்ல சமூகத்தின் நன்மைக்காக அர்ப்பணம் செய்து தங்களது தனிப்பட்ட வாழ்வை அர்ப்பனித்தவர்கள் அவ்வாறான ஒருவர்தான் கலாநிதி மர்ஹும் எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள்.

அறிவுத் தந்தை நளீம் ஹாஜியாரோடு இணைந்து நளீமியாவை ஸ்தாபிப்பதிலும் அதனை வளர்ப்பதிலும் சர்வதேச அந்தஸ்துக்கு அதனை உயர்த்துவதிலும் இலங்கையில் நடுநிலை சிந்தனையை அறிமுகப் படுத்துவதிலும் பெரும் பங்களிப்புச் செய்த கல்விமான் அறிஞர் கலாநிதி சுக்ரி அவர்கள்.

அவர்களது ஆற்றொழுக்கான உரைகளும் ஆழமான கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களும் பரந்த சிந்தனையும் இலங்கை முஸ்லிம்களது வரலாற்றில் தடம் பதித்திருக்கின்றன.அன்னாரது சிந்தனையின் ஆழத்தை அவர்கள் கையாண்ட சொற்களூடாகக் கூட தெளிவாக புரியமுடியும்.1978 அக்டோபர் முதல் வெளிவரும் இஸ்லாமிய சிந்தனை சஞ்சிகையில் அவர்கள் எழுதி வந்த ஆக்கங்கள் அவர்களது சிந்தனையின் வீச்சுக்கான சிறந்த சான்றுகள்.

கடந்த 2001 ம் ஆண்டு எனது தலைமையின் கீழ் முஸ்லிம் சமூக ஆய்வு மன்றம் எனும் அமைப்பை இஸ்தாபித்த போது அதற்கு தேவையான முஸ்லிம் சமூகம் பற்றிய தேவையான ஆவனங்கள் மற்றும் தரவுகள் போன்றவற்றை எமக்கு வழங்கி முழுஆதரவையும் வாழ்த்துக்களையும் முதன்முதலில் தெரிவித்ததை இத்தருணத்தில் நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்.

அவ்வாறு பல்துறை ஆளுமைகளை சமூகத்திற்கு உருவாக்கி முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு பெரிதும் பங்காற்றிய கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி தனது 80 வது வயதில் 2020 மே 19 இல் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று மறுமை வாழ்விற்காக மீண்டும் அவனிடமே சென்று விட்டதை அறிந்து பெரும் மனவேதனை அடைந்துள்ளேன்.

இறைவன் அவரது சமூக பணிகளையும், நல் அமல்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டு உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக! ஆமின்

அல் ஹாபில் நஷீர் அஹமட்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

No comments:

Post a Comment