தனிமைப்படுத்தப்பட்ட பொலன்னறுவை அபயபுர கிராமம் விடுவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

தனிமைப்படுத்தப்பட்ட பொலன்னறுவை அபயபுர கிராமம் விடுவிப்பு

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டமையினால் பொலன்னறுவையில் உள்ள லங்காபுர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலக பிரிவில் உள்ள அபயபுர கிராமம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிய கடற்படையைச் சேர்ந்த முதலாவது நபராக அடையாளம் காணப்பட்ட வெலிசறை கடற்படை முகாமில் பணி புரியும் சிப்பாய் ஒருவர் விடுமுறையில் தனது ஊரான பொலன்னறுவை புளஸ்திகமவுக்கு சென்றிருந்த வேளையில் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது அடையாளம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி முதல் இந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad