கசிப்பினால் ஏற்பட்ட விபரீதம் - கத்திகுத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் பலி - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

கசிப்பினால் ஏற்பட்ட விபரீதம் - கத்திகுத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் பலி

பின்னவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரத்தென்ன பம்புகொளை கீழ் பிரிவு தோட்டத்தில் கத்தி குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பின்னவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 07 மணியளவில் இடம் பெற்றதாகவும் கத்தி குத்தினை மேற்கொண்ட சந்தேக நபரை பின்னவலை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரித்தனர்.

குறித்த இரண்டு நபர்களும் கசிப்பு அருந்திவிட்டு குறித்த தோட்டப்பகுதியில் உள்ள வரத்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதால் ஆத்திரமடைந்த அயல் வீட்டைச் சேர்ந்த நபர் கத்தியால் குத்தியதாகவும் கத்தி குத்துக்கு உள்ளான நபர் பலத்த காயங்களோடு மரத்தென்ன வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரத்தென்ன பம்புகலை தோட்டப்பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலுகுமாரராஜ் என்பவரே சம்பவத்தில் உயிர்ழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்ற பலாங்கொடை நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் டி.எம்.சந்ரசேகர தலைமையில் மரண விசாரனைகள் இடம்பெற்றுள்ளன.

சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் மரத்தென்ன வைத்தியசாலையில் இருந்து பலாங்கொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பின்னவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பின்னவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

மலையக நிருபர் சதீஸ்குமார்

No comments:

Post a Comment

Post Bottom Ad