நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் - ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரமாட்டோம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 20, 2020

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் - ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரமாட்டோம்

நாடாளுமன்றத்தை தாமதமின்றி உடனடியாக மீளக்கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் தற்போது எதிர்கொண்டுள்ள மிக மோசமான நிலைமையை எதிர்கொள்வதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளாந்தம் மக்களின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது என தெரிவித்துள்ள அவர் நாடாளுமன்றத்தை மீள கூட்டுவது மிகவும் அவசியம் அதன் மூலம் நிலைமை மேலும் மோசமடைவதை கட்டுப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோன வைரசினால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு ஆதவளிப்பதாக அரசாங்கம் உறுதியளித்தது என சுட்டிக்காட்டியுள்ள சஜித் பிரேமதாச எனினும் இந்த வாக்குறுதி வெறும் ஆவணத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணையை கொண்டுவரமாட்டோம், நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரமாட்டோம் என சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad