ஜூன் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம் - லக்ஷமன் யாப்பா - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

ஜூன் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம் - லக்ஷமன் யாப்பா

(இராஜதுரை ஹஷான்) 

ஜூன் மாதம் பொதுத் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம். பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமாயின் தேர்தல் முறையில் திருத்தம் செய்வது அவசியமாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளன. 

பொதுத் தேர்தலை அடுத்து நடத்துவதே அனைத்து தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும். ஜூன் மாதம் நடுப்பகுதியில் பொதுத் தேர்தல் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம். பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமாயின் தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய வேண்டும். 

ஆனால் தற்போது தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான மக்களாதரவு அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெறும். பொதுத் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதே அரசாங்கத்தின் அடுத்த இலக்கு என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad