சட்டவிரோதமாக 9 மாடுகளை கொண்டு சென்றவர் கைது - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

சட்டவிரோதமாக 9 மாடுகளை கொண்டு சென்றவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 9 மாடுகளை சவளக்கடை பொலிசாஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இருந்து சம்மாந்துறை பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக வழித்தடை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற சுமார் 9 மாடுகள் திங்கட்கிழமை (4) நள்ளிரவு மீட்கப்பட்டது.

இவ்வாறு சம்மாந்துறை பிரதேசத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மீட்கப்பட்ட 9 மாடுகள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நடவடிக்கையானது சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டனர்.

அத்துடன் மாடுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்றவரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment

Post Bottom Ad