புத்தளத்தில் சிக்கிய 46 இளைஞர்களை மட்டக்களப்புக்கு அழைத்து வந்தார் வியாழேந்திரன் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

புத்தளத்தில் சிக்கிய 46 இளைஞர்களை மட்டக்களப்புக்கு அழைத்து வந்தார் வியாழேந்திரன்

புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 46 இளைஞர் நேற்று வீடு திரும்பினர். 

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கொண்ட முயற்சியினையடுத்து இவர்கள் இரண்டு பஸ் வண்டிகளில் அழைத்து வரப்பட்டனர். 

புத்தளம் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் வேலை செய்த இவர்கள் நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சத்தினையடுத்து வீடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். 

இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவந்ததையடுத்து இவ்விளைஞர்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார். 

இவர்கள் சந்திவெளி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் சந்திவெளி பொலிஸ் காப்பரணில் இறக்கப்பட்டு விபரங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு புத்தளத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad