உலகம் முழுவதும் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி - கொரோனா அப்டேட்ஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 23, 2020

உலகம் முழுவதும் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி - கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்தது.

உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்தது.

தற்போதைய நிலவரப்படி, 53 லட்சத்து 23 ஆயிரத்து 639 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 28 லட்சத்து 11 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 589 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 97,655
பிரேசில் - 21,116
ஸ்பெயின் - 28,628
இங்கிலாந்து - 36,393
இத்தாலி - 32,616
பிரான்ஸ் - 28,289
ஜெர்மனி - 8,352
ஈரான் - 7,300
கனடா - 6,250
மெக்சிகோ - 6,989
பெல்ஜியம் - 9,237
நெதர்லாந்து - 5,788

No comments:

Post a Comment