ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 290 கைதிகள் விடுதலை - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 290 கைதிகள் விடுதலை

வெசாக் பௌணர்மி தினத்தையிட்டு, 290 கைதிகளை விடுதலை செய்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரி.எம்.ஜே.டபிள்யூ. தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 228 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, நன்னடத்தை காரணமாக 62 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

65 வயதிற்கு மேற்பட்ட சிறு குற்றங்கள் இழைத்தவர்களும், அபராதம் செலுத்த தவறியவர்களுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதன் பிரகாரம் நாடளாவிய ரீதியிலுள்ள 30 சிறைச்சாலைகளிலிருந்து இக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களில் 04 பெண் கைதிகள் அடங்குவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இதில் 62 கைதிகள் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இக்கைதிகள் கண்காணிக்கப்படுவதோடு, நிபந்தனைகளை மீறினாலோ, அல்லது, குற்றச்செயல்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும், அவர் தெரிவித்தார்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad