வவுனியாவில் 276 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Saturday, May 23, 2020

வவுனியாவில் 276 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாம் மற்றும் பெரியகாடு இராணுவ முகாம் ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு நேற்றையதினம் (22) கடற்படையினர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 500 இற்கும் மேற்பட்ட கடற்படையினருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படையினர் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு 174 கடற்படையினரும் பெரியகாட்டில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு 102 கடற்படையினருமாக மொத்தமாக 276 பேர் பல பஸ்களில் நேற்று இரவு கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

(வவுனியா நிருபர் கே. வசந்தரூபன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad