மார்ச் 17,18, 19 ஆகிய திகதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றவை - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

மார்ச் 17,18, 19 ஆகிய திகதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றவை

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட மார்ச் 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்கள் விடுமுறை தினங்கள் என்பதால் அந்த நாட்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியற்றதாகும். காரணம் பொதுவிடுமுறை தினங்களில் சட்ட ரீதியான எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது என்பதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட குழுக்களின் தலைவரும், முன்னாள் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மார்ச் 17, 18 மற்றும் 19 ஆகிய மூன்று தினங்களும் விடுமுறை தினங்கள் என அறிவிக்கப்பட்டதால் இந்த நாட்களில் எவ்வித சட்ட ரீதியான செயற்பாட்டையும் செய்ய முடியாது. 

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் சட்டம் மற்றும் அரச விடுமுறை சட்டம் ஆகிய இரண்டுமே பொருந்தும். விடுமுறை சட்டத்தின் 364 ஆவது அத்தியாயத்தின் 5 ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்டுள்ள இலத்தீன் வசனத்திற்கு சட்ட அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளுக்கு அமைய எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் விடுமுறை தினங்களில் முன்னெடுக்க முடியாது என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அதற்கமைய பொதுவிடுமுறை தினமொன்றில் வேட்புமனு தாக்கலை ஏற்றுக் கொள்வது செல்லுபடியாகாது. இந்நிலைமையின் கீழ் மார்ச் 16 ஆம் திகதி விடுமுறை தினமானதால் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதேபோன்று விடுமுறை தினங்களான மார்ச் 17, 18 மற்றும் 19 ஆகிய தினங்களுக்கும் இது செல்லுபடியாகும் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad