10 மாவட்டங்களுக்கு தொடர்ந்து நிலச்சரிவு எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

10 மாவட்டங்களுக்கு தொடர்ந்து நிலச்சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து 10 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

காலி, மாத்தறை, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, கொழும்பு, நுவரெலியா, குருணாகல், கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (18) பிற்பகல் 2.00 மணி முதல், நாளை (19) பிற்பகல் 2.00 மணி வரை நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திடீரென சுவர்களில் வெடிப்பு, தரையில் வெடிப்பு, நீர் வெளிப்படுதல் போன்றவை நிலச்சரிவுக்குரிய அறிகுறிகளாகத் தென்படுவதால், குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad