வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட அரச நிறுவனங்களுக்கு தடை! - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 22, 2020

வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட அரச நிறுவனங்களுக்கு தடை!

நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட அரச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சுகள், திணைக்களங்கள், நியதிச் சட்ட சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் ஆகியவற்றின் அதிகாரிகள் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நடவடிக்கைகள் கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் என்பதால் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரச நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார நிலை காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்தினை சில வேட்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அத்துடன், இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad