இந்து பேரவையினூடாக சமுர்த்தி உதவிகளற்ற கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி - News View

Breaking

Post Top Ad

Sunday, April 5, 2020

இந்து பேரவையினூடாக சமுர்த்தி உதவிகளற்ற கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி

எஸ்.எம்.எம்.முர்ஷித்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமை தொடர்பில் நாடளாவிய ரீதியில் முடக்கம் ஏற்பட்டுள்ளமையைக் கருத்திற் கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட இந்து பேரவையினூடாக இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் நிதி மூலம் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி மூலம் கூலித் தொழில் புரிந்து வாழும் சமுர்த்தி உதவிகளற்ற வறிய குடும்பங்களின் உணவுத் தேவையினை நிறைவேற்றும் வகையில் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

அந்த வகையில், காயாங்கேணியில் 20 பேருக்கும், இறாலோடையில் 15 பேருக்கும், மாங்கேணியில் 15 பேருக்கும், கும்புறுமூலையில் 20 பொதிகள், கிரானில் 20 பேருக்கும், கறுவாக்கேணியில் 20 பேருக்கும், சந்திவெளியில் 20 பேருக்கும், கோரகல்லிமடுவில் 10 பேருக்கும், முறக்கொட்டாஞ்சேனையில் 15 பேருக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

குறித்த உதவிகள் பேரவைப் பிரநிதிகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் சகிதம் சென்று வழங்கி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad