பௌத்த சமயத்தில் A சித்தி பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் மாணவன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

பௌத்த சமயத்தில் A சித்தி பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் மாணவன்

குருணாகல்‌ மலியதேவ கல்‌லூரியில்‌ ஆங்கில மொழி மூலம்‌ க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த சம்மாந்துறையை பிறப்பிடமாகவும்‌ குருணாகல்‌ கிரியுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகவும்‌ கொண்ட மொஹமட்‌ றிஸ்மி மொஹமட்‌ றஸ்லான்‌ எனும்‌ முஸ்லிம்‌ மாணவன்‌ நேற்று முன்தினம் (27)‌ வெளியாகிய சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின்‌ அடிப்படையில்‌ பெளத்த சமய பாடத்தில்‌ 'ஏ' சித்தி பெற்று அரிதான சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார்‌.

புலமைப்பரிசில்‌ பரீட்சையில்‌ சித்தியடைந்து குறித்த பாடசாலைக்கு தெரிவாகிய இம்மாணவனுக்கு இஸ்லாம்‌ பாடத்தை கற்பதற்கான சூழ்நிலை அப்பாடசாலையில்‌ கிடைக்காததன்‌ காரணமாக பெளத்த சமய பாடத்தை கற்று அதில்‌ 'ஏ' சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன்‌ குறித்த மாணவன்‌ 8 பாடங்களில்‌ A சித்தியும் ஒரு பாடத்தில்‌ B சித்தியும்‌ பெற்றுள்ளார்‌.

No comments:

Post a Comment