யாழில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

யாழில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

யாழ்ப்பாணம், அராலிதுறையிலுள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதியிலுள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

யாழ். அராலிதுறையில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு நேற்றையதினம் தொடக்கம் குறித்த இராணுவ முகாம் தவிர்ந்த வெளியாட்கள் தொடர்ச்சியாக அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்து, அயல் கிராம மக்கள் இன்று (29) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த இராணுவ முகாமில் கொரோனா நோய் சந்தேக நபர்களை தனிமைப்படுத்தினால் அது தமக்கு ஆபத்தானதாக அமையும் எனவும், பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் எனவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அருகிலுள்ள தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் எனவும் இதன் காரணமாக மீன்பிடித்தொழில் மேற்கொள்வது சிக்கலானதாக மாறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தமக்கும் இராணுவத்துக்கும் பாதிப்பில்லாத பொருத்தமான இடத்தில் இத்தகைய தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்குமாறும் மக்கள் செறிவாக வாழ்கின்ற இப்பகுதியில் குறித்த இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் அம்மக்கள் மேலும் தெரிவித்தனர் .

(நிதர்சன் விநோத், விருசன் தேவா)

No comments:

Post a Comment