இரு ராஜபக்ஷ குழுக்களின் அதிகாரப் போட்டியாக மாறியுள்ள கொரோனாவுக்கு எதிரான போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

இரு ராஜபக்ஷ குழுக்களின் அதிகாரப் போட்டியாக மாறியுள்ள கொரோனாவுக்கு எதிரான போராட்டம்

(நா.தனுஜா) 

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டமானது தற்போது இரண்டு ராஜபக்ஷ குழுக்களுக்கு இடையில் நடைபெறுகின்ற அதிகாரப் போட்டியாக மாறியிருக்கின்றது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியிருக்கிறார். 

இது குறித்து, மங்கள சமரவீர அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் பதிவுசெய்திருப்பதாவது,

'கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டமானது தற்போது இரண்டு ராஜபக்ஷ குழுக்களுக்கு இடையில் நடைபெறுகின்ற அதிகாரப் போட்டியாக மாறியிருக்கின்றது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாராளுமன்றம் இல்லாமல் தொடர்ந்தும் ஆட்சியைக் கொண்டு செல்வதற்கான ஒரு நுட்பமாக கொரோனா வைரஸ் பரவலைக் பயன்படுத்தும் அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மக்களின் உயிர்களைக் காவு கொடுத்தேனும் விரைவாகத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கிறார். 

ஜனநாயகம் என்பது மிகவும் முக்கியமானதும் அவசியமானதுமாகும். எனினும் மக்களின் உயிர் பாதுகாப்பு என்பவையே மீயுயர் முக்கியத்துவத்திற்கு உரியவையாகும்'.

No comments:

Post a Comment